ஆர்எஸ்பாரதி கைது! கனிமொழி கண்டனம்! பதிலளித்த காயத்ரி ரகுராம்!

24 May 2020 அரசியல்
gayathriraghuram.jpg

நேற்று காலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள ஆர்எஸ்பாரதியின் வீட்டிற்குச் சென்ற போலீசார், அவரைக் கைது செய்தனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர், விழா மேடையில் பேசிய பொழுது, நீதிபதிகள் பணிக்கு பட்டியலினத்தவர்கள் வருவது குறித்து தரக்குறைவாகப் பேசியிருந்தார் ஆர்எஸ் பாரதி. அவர் பேச்சு அப்பொழுது சர்ச்சைக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது ஆதித் தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆலந்தூரில் உள்ள ஆர்எஸ்பாரதியின் வீட்டிற்கு அதிகாலையில் சென்ற போலீசார், அவரைக் கைது செய்தனர். அவர் நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவரை ஆஜர் படுத்தினர். இரு தரப்பினரின் வாதத்தினையும் கேட்ட நீதிபதி, ஜூன்-1ம் தேதி வரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இதனிடையே, ஆர்எஸ் பாரதி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர்கள் கண்டனங்களை எழுப்பி வந்தனர். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி இது குறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அதில், திமுக அமைப்பு செயலாளர் அண்ணன் RSBharathi கைது செய்யப்பட்டதை, வன்மையாகக் கண்டிக்கிறேன். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் செய்த ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி, சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதால், காழ்ப்புணர்ச்சியோடு ஆர்.எஸ்.பாரதி அவர்களை அதிமுக அரசு கைது செய்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இது போன்ற நடவடிக்கைகளால் திமுகவை அச்சுறுத்த அதிமுக அரசு நினைத்தால், அது நடக்காது

இதனிடைய இது குறித்து, பிக்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் தன்னுடை டிவிட்டர் கணக்கில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மேடம், தயவுசெய்து நீங்கள் குற்றம் சாட்டுவதற்கு முன் சரியான அறிக்கையுடன் வாருங்கள். இந்த வழக்கில் எப்படியும் குற்றம் சாட்டுவது பலனளிக்காது. அவர் தான் சாதியை பாகுபாடு காட்டினார். எனவே எந்தவொரு சாதியாக இருந்தாலும் (பிராமணர்கள் அல்லது தலித்துகள் உட்பட) சாதி பாகுபாடு பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

HOT NEWS