அடங்கிப் போன மதுரை! அடங்காத கொரோனா பாதிப்பு!

24 June 2020 அரசியல்
coronamadurai.jpg

மதுரையில் தற்பொழுது முழு ஊரடங்கானது, அமலுக்கு வந்தது. இதனால், அங்குள்ள வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிப் போய் உள்ளன.

இந்தியா முழுவதும் தற்பொழுது கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில், தமிழகத்தின் சென்னையில், நாளுக்கு நாள் இந்த வைரஸால் ஏற்படும் பாதிப்பானது, அதிகரித்துக் கொண்டே உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 64603 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில், 35339 பேர், குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இந்த வைரஸால் 833 பேர் பலியாகி உள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவல் வேகமாக உள்ளக் காரணத்தால், ஊரடங்கு உத்தரவானது ஏற்கனவே அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையின் காரணமாக, சென்னையில் வசித்து வந்தப் பலரும், காய்கறி வண்டிகள், இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் பிற வாகனங்கள் மூலம், சென்னையில் இருந்து மதுரை உட்பட பலப் பகுதிகளுக்கு கிளம்பிச் சென்று உள்ளனர்.

இதனால், தமிழகத்தில் மேலும் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாகும் என்றுக் கூறப்படுகின்றது. இவ்வாறு சென்றவர்களால், மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக் தொடங்கி உள்ளது. இதனால், அங்கு தற்பொழுது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முழு ஊரடங்கின் காரணமாக, மதுரையின் அனைத்து வீதிகளும் வெறிச்சோடிப் போய் உள்ளன.

ஜூன் 24ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை, ஊரடங்கானது அமலில் உள்ளது. இதனால், மருந்தகங்கள், மருத்துவமனைகள், அவசர ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்டவைகளுக்கு மட்டும் தடையற்ற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பிற சேவைகள் அனைத்தும், காலை ஆறு மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளன. பேருந்து நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன.

சாலைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அனைத்துப் பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். முகக் கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் செய்து வருவதால், பொதுமக்கள் வெளியில் வராமல் உள்ளனர். மேலும், வருகின்ற ஜூன் 28ம் தேதி அன்று, எவ்வித தளர்வும் இன்றி, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என, மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.

HOT NEWS