நேதாஜி பிறந்த நாளை விவசாயிகள் தினமாகக் கொண்ட விவசாயிகள் சங்கம் முடிவு!

04 January 2021 அரசியல்
farmerprotesttikri.jpg

இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 23ம் தேதி அன்று வருகின்ற நேதாஜியின் பிறந்த நாளை, விவசாயிகள் தினமாகக் கொண்டாட உள்ளதாக, விவசாயிகள் சங்கம் தெரிவித்து உள்ளது.

40 நாட்களைக் கடந்து, டெல்லியில் நடைபெற்று வருகின்ற விவசாயிகள் போராட்டம் சென்று கொண்டு உள்ளது. இன்று மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஏற்கனவே தங்களுடைய நான்கு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்தனர். அதில் 2 கோரிக்கைகளில் சமரசம் ஏற்பட்டது என மத்திய அரசும் அறிவித்தது. அதற்கு விவசாய சங்கத்தினர், மறுப்புத் தெரிவித்து உள்ளனர்.

இந்த சூழலில், வருகின்ற ஜனவரி 13ம் தேதி அன்று, விவசாய மசோதாக்களை எரித்து, லஹோரி விழாவானது கொண்டாடப்பட உள்ளது எனத் தெரிவித்து உள்ளனர். மேலும், வருகின்ற ஜனவரி 23ம் தேதி அன்று சுதந்திரப் போராட்ட வீரரும், போராளியுமான நேதாஜியின் பிறந்த நாள் வருகின்றது. அந்த நாளினை விவசாயிகள் தினமாகக் கொண்டாடவும் திட்டமிட்டு உள்ளோம்.

அதனைத் தொடர்ந்து, ஜனவரி 26ம் தேதி அன்று, டெல்லியில் குடியரசுத்தின விழாவின் பொழுது டிராக்டர் பேரணியினை நடத்த உள்ளோம் எனவும் தெரிவித்து உள்ளனர்.

HOT NEWS