இங்கிலாந்து வெ.இண்டீஸ் போட்டி! முழங்காலிட்ட வீரர்கள்! எதற்குத் தெரியுமா?

09 July 2020 விளையாட்டு
engvswicovid19.jpg

இங்கிலாந்திற்கும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கும் இடையில், தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, இங்கிலாந்தில் தொடங்கி உள்ளது. இதில், ஹோல்டர் தலைமையிலான வெ.இண்டீஸ் அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியும் நேற்று முதல் போட்டியில் மோதின.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கினைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியின் முதல் இரண்டு நாட்களும் மழைப் பெய்யும் வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த சூழ்நிலையில், அந்தப் போட்டியின் பொழுது, இரு நாட்டு அணி வீரர்களும் ஒற்றுமையினை வலியுறுத்தி கருப்பினத்தவர்களுக்கு ஆதரவளிக்கும் சின்னத்தினை அணிந்து விளையாடினர்.

மேலும், போட்டித் தொடங்கும் முன், நடுவர் உட்பட இரு அணி வீரர்களும், இனவெறிக்கு எதிரான முறையில், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் தரையில் மண்டியிட்டனர். பின்னர், போட்டித் தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணியால் வெறும் 17.4 ஓவர்கள் மட்டுமே விளையாட முடிந்தது. ஆட்டத்தின் பொழுது, தொடர்ந்து மழைக் குறுக்கிட்டதால், ஆட்டம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.

முதல் நாள் முடிவில், ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்து இருந்தது. அந்த அணியின் ரோரி பர்ன்ஸ் 20 ரன்களும், ஜோ டென்லி 14 ரன்களும் எடுத்தனர்.

HOT NEWS