2வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி! சுருண்டது வெ.இண்டீஸ்!

21 July 2020 விளையாட்டு
engvswi2nd.jpg

இங்கிலாந்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், வெ.இண்டீஸ் அணியானது 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியினைத் தழுவியது.

இங்கிலாந்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரானது, நடைபெற்று வருகின்றது. முதல் போட்டியில் வெ.இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதனிடையே, மென்செஸ்டர் நகரில் இரண்டாவது டெஸ்ட் போட்டித் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெ.இண்டீஸ் அணியானது, பந்து வீச்சினைத் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து 162 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து, 469 ரன்களை குவித்தது. அந்த அணியின், ஸ்டோக்ஸ் 176 ரன்களும், சிப்லே 120 ரன்களும், ஜோஸ் பட்லர் 40 ரன்க்களும் குவித்தனர். வெ.இண்டீஸ் சார்பில், சேஸ் 5 விக்கெட்டுகளும், ரோச் 2 விக்கெட்டுகளும், ஜோசப் மற்றும் ஹோல்டர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தன்னுடைய முதல் இன்னிங்சில் வெ.இண்டீஸ் அணியானது, 99 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்களை எடுத்தது. அந்த அணியின் பிராத்வொயிட் 75 ரன்களும், ப்ரூக்ஸ் 68 ரன்களும், சேஸ் 51 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணியின் சார்பில், பிராட், கிரிஸ் ஓக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், குர்ரான் 2 விக்கெட்டுகளும், பீஸ் மற்றும் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெடும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 2வது இன்னிங்சைத் தொடங்கிய இங்கிலாந்து, 19 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து, 129 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இமாலய இலக்கினை நோக்கி தன்னுடைய 2வது இன்னிங்சை வெ.இண்டீஸ் அணி தொடங்கியது. அந்த அணி, 70.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்களை மட்டுமேக் குவித்தது. இங்கிலாந்து அணியின் பிராட் 3 விக்கெட்டுகளையும், வோக்ஸ், பீஸ், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், குர்ரான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 113 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS