ஈஸ்வரன் சூட்டிங் முடிந்தது! சிம்பு வழங்கிய அன்பு பரிசு! படக் குழுவினர் நெகிழ்ச்சி!

09 November 2020 சினிமா
eeswaranshooting.jpg

ஈஸ்வரன் படத்தின் சூட்டிங் ஜெட் ஸ்பீடில் முடிந்துள்ள நிலையில், அப்படக் குழுவினருக்கு அன்பு பரிசினை சிம்பு வழங்கியுள்ளார்.

தற்பொழுது சுறுசுறுப்பாக நடித்து வருகின்ற சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்றப் படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்குள் அந்தப் படத்தின் சூட்டிங்கானது, முடிந்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து, மாநாடு படமானது எடுக்கப்படாமல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக, அந்தப் படத்தினை தொடங்குவதற்குள், இடைப்பட்ட காலத்தில் ஒரு படத்தினை விரைவாக நடித்து முடிக்க நடிகர் சிம்பு முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில், தற்பொழுது புதியதாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில், புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு உள்ளார் சிம்பு. அதில், ஈஸ்வரன் படத்தின் சூட்டிங் முடிந்து விட்டதாகவும், அதன் டப்பிங் தற்பொழுது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று வைரலாகி வருகின்றது. படத்தின் சூட்டிங் முடித்த நாளன்று, படக்குழவினர் சுமார் 400 பேருக்கு, நடிகர் சிம்பு, தன்னுடைய செலவில் ஒரு கிராம் தங்க நாணயத்தினை வழங்கியிருக்கின்றார்.

தற்பொழுது பலப் படங்களில் நடித்து வருகின்ற சிம்புவின் படங்கள், அடுத்த ஆண்டு அதிகளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வருகின்ற தீபாவளி அன்று ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS