ஈரான் மீதான பொருளாதாரத் தடை முடிவுக்கு வந்தது! அமெரிக்காவிற்கு ஆப்பு?

20 October 2020 அரசியல்
uno.jpg

நேற்றுடன் ஈரான் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் அனைத்தும் முடிவிற்கு வருவதாக, அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

ஈரான் அத்துமீறி, அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்து இருப்பதாக, அமெரிக்க அரசு அந்நாட்டின் மீது குற்றம் சாட்டியது. இதனால், ஐநா சபையானது, ஈரான் மீது கடந்த 2007ம் ஆண்டு பொருளாதாரத் தடையினை விதித்தது. மேலும், அந்நாடு தீவிரவாதத்தினை ஊக்குவிப்பதாகவும், பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது. அதனைத் தொடர்ந்த, கடந்த 2015ம் ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் ஈரான் ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த ஒப்பந்தமானது, 2015ம் ஆண்டு நடைபெற்றது. அதன் அடிப்படையில், ஈரான் மீதான சர்வதேசப் பொருளாதாரத் தடையானது, வருகின்ற 2020ம் ஆண்டுடன் முடிவடைவதாக ஐநா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அமெரிக்காவில் இன்னும் சில நாட்களில், அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், அந்நாட்டின் கவனம் முழுக்க அந்தத் தேர்தலை நோக்கியே உள்ளது. இந்த சூழ்நிலையில், அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது பழி சுமத்தியது. ஆனால், அதன் முயற்சிகள் அனைத்தும் வீண் போகியுள்ளது.

தற்பொழுது ஈரான் அரசு, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தங்களுடைய நாட்டின் மீதான, சர்வதேசப் பொருளாதாரத் தடையானது நீக்கப்பட்டு உள்ளது எனவும், நாங்கள் அணு சக்தியினை ஆக்கப்பூர்வமாகவே பயன்படுத்துகின்றோம் எனவும் கூறியுள்ளது.

HOT NEWS