போலி சித்த வைத்தியர் தணிகாச்சலத்தின் திருட்டுத்தனம் அம்பலம்!

08 May 2020 அரசியல்
thiruthankichalam1.jpg

யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு, மக்கள் மத்தியில் பதற்றத்தினை உருவாக்கி வந்த போலி சித்த வைத்தியர் தணிகாச்சலம் போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் போலீசார் தற்பொழுது கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது, மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், தொற்று நோய் சிறப்புத் தடுப்புப் பிரிவின் கீழ் கைது செய்து உள்ளனர்.

தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பேசி வந்த தணிகாச்சலம், தன்னிடம் கொரோனா வைரஸிற்கு மருந்து இருப்பதாகவும், அதனைப் பயன்படுத்தி கொரோனா வைரஸை எளிதாகக் குணமாக்க இயலும் என்றுக் கூறி வந்தார். அதனை நம்பி பலரும், தங்களுடையப் பணத்தினை ஏமாந்துள்ளனர்.

குறிப்பாக, ஆட்டிசம், மற்றும் வயிற்று உபாதைகளுக்கு இவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். அவர் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிகிச்சை அளிப்பதற்காக வருடக் கணக்கில் பணம் பெற்று ஏமாற்றி வந்துள்ளதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. வயிற்று வலி என்று சென்றால், அச்சிடப்படாத மாத்திரைகள், மருந்துகளை அவர் வழங்கியுள்ளார்.

அதனைப் பயன்படுத்தியவர்களுக்கு, வாந்தி, மயக்கம், வயிற்று வலி முதலானவை ஏற்பட்டு இருக்கின்றன. இதனால், ஆட்டிசம் நோயாளிகளை ஒன்றினைத்து, உதவி வரும் பாலபாரதி என்பவர் குற்றம் சாட்டி வருகின்றார். தணிகாச்சலம், எவ்வித சித்த மருத்துவத்தையும் படிக்கவில்லை. அதே சமயம், அவருடைய மனைவி சித்த மருத்துவம் படித்தவர். அதனைப் பயன்படுத்தி, இவர் பணம் சம்பாதித்து வந்துள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகி உள்ளது.

இவ்வளவு சில்லரை வேலைகளைச் செய்தவர், தற்பொழுது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரிடம், போலீசார் தொடர்ந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

HOT NEWS