கொரோனா மருந்து! WHO அமைப்புடன் இணைய முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!

03 September 2020 அரசியல்
donaldtrumpiran.jpg

கொரோனாவிற்கான மருந்து தயாரிக்கும் முயற்சியில், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பணியாற்ற முடியாது என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி, சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து உலகம் முழுக்க, கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸால், அமெரிக்க அரசு தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் மருந்தினைத் தயாரிக்கும் முயற்சியில், பல நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.

ரஷ்யா மற்றும் சீனா ஏற்கனவே, கொரோனாவிற்கான மருந்திக் கண்டுபிடித்து விட்டதாக கூறியுள்ளது. இந்நிலையில், அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்யவும், தயாரித்து உலகளவில் உள்ள நாடுகளுக்கு வழங்கவும், உலக சுகாதார அமைப்பானது அனைத்து நாடுகளையும் அழைத்துள்ளது. சுமார் 170 நாடுகள், இதில் இணைந்துள்ளன. இந்த சூழலில், ஏற்கனவே அமெரிக்கா உலக சுகாதார மையத்திலிருந்து விலகி விட்டது.

அமெரிக்காவிற்கு உலக சுகாதார அமைப்பு துரோகம் செய்து விட்டதாகவும், அந்த அமைப்பு சீனாவிற்கு துணை போவதாகவும் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தற்பொழுது பேசியுள்ள அமெரிக்கா, உலக சுகாதார மையமானது, சீனாவின் கைப்பாவையாக உள்ளது எனவும், அதிக ஊழல் நிறைந்த அந்த அமைப்புடன் இணைந்து, அமெரிக்கா மருந்து தயாரிக்காது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளது.

HOT NEWS