வரும் ஏப்ரலில் அனைவருக்கும் கொரோனா மருந்து! ட்ரம்ப் கருத்து!

16 November 2020 அரசியல்
donaldtrumpvirus.jpg

வருகின்ற 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் கொரோனா மருந்தானது வழங்கப்படும் என, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த தேர்தலில், அமெரிக்காவில் தற்போதைய அதிபராக இருக்கும் ட்ரம்ப் தோல்வியினைத் தழுவி உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பிடனும், கமலா ஹாரீஸும் வெற்றி பெற்று உள்ளனர். இந்த சூழ்நிலையில், தானே வெற்றி பெற்று உள்ளேன் எனக் கூறி வரும் ட்ரம்ப், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் பிபிசர் நிறுவனமானது, கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்தின், 3வது கட்ட ஆய்வில் உள்ளது.

இது குறித்து நேற்று பேசிய ட்ரம்ப், வருகின்ற ஏப்ரல் மாதம் பிபிசர் மருந்தானது அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. முதலில் முதல் நிலைப் பணியாளர்கள், வயது முதிர்ந்தோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்றுக் கூறியுள்ளார். தேர்தலில் சட்டப்பூர்வ வாக்குகளை எண்ணினால், நாம் தான் வெற்றி பெறுவோம் எனவும், சட்டத்திற்கு புரம்பான வாக்குகளை எண்ணினால் அவர்கள் வெற்றி பெறுவர் என்றும் கூறியுள்ளார்.

HOT NEWS