அமெரிக்காவின் சதித் திட்டம் அம்பலம்! மருந்தினை மொத்தமாக வாங்க நினைத்த டிரம்ப்!

31 March 2020 அரசியல்
coroanvirustrump.jpg

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸால் தற்பொழுது வரை, 8,00,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 38,000 பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர். 1,65,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

இந்நிலையில், இந்த நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஜெர்மனி நாடானது, புதிய மருந்து கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இது தற்பொழுது ஆராய்ச்சி நிலையிலேயே இருப்பதாகவும், பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு இந்த மருந்து வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, மருந்து தயாரிக்கும் நிறுவனமான டை வெல்ட் என்ற நிறுவனம் தான் இந்த மருந்தினைத் தயாரித்துள்ளதாக தகவல்கள் கசிந்தன. இதனைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் தலைவர்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்துள்ளார். அவர்களுடன் பேசிய அவர், மருந்தினை சோதிக்கும் முயற்சியினைத் துரிதப்படுத்த வேண்டும் எனக் கூறியிருக்கின்றார்.

அதே போல், கண்டுபிடிக்கும் மருந்தினை அமெரிக்காவிடம் விற்றுவிட வேண்டும் எனவும் வற்புறுத்தியிருக்கின்றார். இதற்கு, அந்த நிறுவனத்தின் தலைவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்த மருந்தானது, உலக மக்களுக்கானது எனவும், ஒரு நாட்டிற்கானது அல்ல எனவும் கூறியிருக்கின்றனர். இது குறித்த, செய்தியினை ஐரோப்பிய செய்தி நிறுவனமானது, அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Source:www.politico.eu/article/germany-confirms-that-donald-trump-tried-to-buy-firm-working-on-coronavirus-vaccine/ Source:www.independent.co.uk/news/world/europe/coronavirus-vaccine-trump-germany-us-dietmar-hopp-carevac-a9404646.html

HOT NEWS