டிரம்ப் விரைவில் டிஸ்சார்ஜ்! வாகனத்தில் சென்று கை அசைத்த டிரம்ப்!

05 October 2020 அரசியல்
donaldtrumpvirus.jpg

கொரோனா வைரஸ் பாதிப்பால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸ் காரணமாக அமெரிக்க அரசு தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டு மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அதனைப் பற்றி எல்லாம் அவர்கள் பொருட்படுத்தவே இல்லை. இதன் காரணமாக, கொரோனா வைரஸ் பாதிப்பில் நம்பர் ஒன் என்ற இடதிதனை அமெரிக்கா பிடித்துள்ளது. தொடர்ந்து, கொரோனா வைரஸ் குறித்த அறிவிப்புகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

அவருடைய மனைவியும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதால், அவர்கள் இருவரும் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள வால்டர் ரீட் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவருடைய உடலுக்கு தற்பொழுது செயற்கை ஆக்சிஜன் உதவி வழங்கப்பட்டதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. அவருடைய உடல்நிலையினை, 24 மணி நேரமும் மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றது.

இது குறித்து பேசியுள்ள மருத்துவ நிபுணர் சான் கான்லி, கடந்த வெள்ளிக் கிழமை அன்று ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள், டிரம்பிற்கு வழங்கப்பட்டது எனவும், அவருடைய உடலில் தற்பொழுது காய்ச்சல் இல்லை எனவும் கூறினார். கடந்த வெள்ளியன்று அவருடைய உடலில் உள்ள ஆக்சிஜன் 94% கீழாக சென்றதாக தெரிவித்து உள்ளார். சனிக்கிழமை 93% கீழாக ஆக்சிஜன் குறைந்தது எனவும், எனவே, ஒரே ஒரு முறை மட்டுமே செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது எனவும் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், சர்ப்ரைஸ் விசிட் என ட்ரம்ப் ட்வீட் செய்திருந்தார். அவருடைய ட்வீட்டால், பல நூறு ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு முன்பு திரண்டனர். இந்த சூழ்நிலையில், திடீரென்று வெளியில் தன்னுடைய காரில் ஏறி, தன்னுடைய ஆதரவாளர்களை நோக்கி, டிரம்ப் கையசைத்துச் சென்றார். இன்று அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS