சீனாவில் கோலாகலமாக நடைபெறும் நாய் கறி திருவிழா!

25 June 2020 அரசியல்
dogmeet.jpg

இந்த ரனகளத்துலயும் உனக்கு கிளுகிளுப்பா என, வடிவேலு தன்னுடையக் காமெடியில் கூறியிருப்பார். அவ்வாறு தான் தற்பொழுது சீனா நடந்து கொண்டிருக்கின்றது.

ஒரு பக்கம், அண்டை நாடுகளுடன் எல்லைத் தகராறு, மறுபக்கம் கொரோனா வைரஸ் பஞ்சாயத்து என எல்லாம் இருக்கையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தற்பொழுது சீன மக்கள் அடுத்த ரவுண்டிற்கு தயாராகி விட்டனர். ஆம், வருடா வருடம் அங்கு நாய்கறித் திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டும் தற்பொழுது அந்தத் திருவிழாவானது, நடைபெற்று வருகின்றது.

ஆனால், திருவிழா எனப் பெயரிடாமல், நாய்க்கறி உண்ணும் நிகழ்வு என்றுக் கூறப்பட்டு உள்ளது. ஏற்கனவே, சீனாவில் உள்ள ஊஹான் விலங்குகள் சந்தையில் இருந்து, கொரோனா வைரஸ் பரவி வருகின்றது என்றுக் கூறப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது இப்படி ஒரு திருவிழாவினை சீன மக்கள் கொண்டாடி வருகின்றனர். அங்கு, நாய்களை வெட்டி, சமைத்து அதனை வருகின்றவர்களுக்கு குறைந்த விலையில் உணவாகத் தருகின்றனர்.

இதில் பலரும், சமூக இடைவெளியினைக் கடைபிடித்து, முகக் கவசம் அணிந்து கொண்டு கலந்து கொண்டனர். இது பல நாடுகளில் வசிப்பவர்களுக்கும் எரிச்சலையும், கோபத்தினையும் உருவாக்கி உள்ளனர். உங்களுக்கு, எவ்வளவு பட்டாலும் புத்தி வராதா எனப் பலரும் சமூக வலைதளங்களில் தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS