அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்க! முக ஸ்டாலின்!

12 October 2020 அரசியல்
dmkslams.jpg

அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என, முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அவருடைய அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதற்கான உயர்சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்றும் முக்கிய முடிவை எடுத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதத் துணைவேந்தர் சூரப்பா என்ன மாநிலத்தின் மற்றொரு முதலமைச்சரா?

69% இடஒதுக்கீடு குறித்து மத்திய பா.ஜ.க. அரசு எந்த உத்தரவாதமும் அளிக்காத நிலையிலும், உயர்சிறப்பு அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறார்!

இதற்கு ரகசிய அனுமதி அளிக்கத்தான் ஆளுநரைச் சந்தித்தாரா முதலமைச்சர் திரு. பழனிசாமி? அண்ணா பல்கலைக் கழகத்தை காவிமயமாக்க முதலமைச்சர் – ஆளுநர் – துணைவேந்தர் கூட்டணியா?

துணைவேந்தர் கடித விவகாரத்தில் அ.தி.மு.க. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS