கட்டாயப்படுத்தி சிலரை அரசியலுக்கு அழைக்கின்றனர்! 16000 கிராம சபை கூட்டங்கள்!

20 December 2020 அரசியல்
mkstalin.jpg

சிலரை கட்டாயப்படுத்தி அரசியலில் கட்சி ஆரம்பிக்க முயற்சிக்கின்றனர் என, திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இன்று திமுகவின் சார்பில் கட்சிப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முக ஸ்டாலின், நம்முடையக் கட்சிக்கு இரண்டு பெரும் ஆதரவு இருக்கின்றது எனவும், ஒன்று அறிஞர் அண்ணா எனவும், மற்றொன்று கலைஞர் எனவும் கூறியுள்ளார். 117 தொகுதிகளில் வென்று ஆட்சியினை அடைவதற்காக, நாம் கட்சி நடத்தவில்லை எனவும், அதீத வித்தியாசத்தில் நாம் வெற்றிப் பெற வேண்டும் எனவும், அதற்காக திமுகவினர் கடுமையாக உழைக்க வேண்டியது நம்முடைய ஒவ்வொருத் தொண்டனின் கடமை எனவும் கூறியுள்ளார்.

தற்பொழுது வருகின்ற டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை, சுமார், 16,000 கிராம சபைக் கூட்டங்களை நடத்த உள்ளதாகவும், அதற்கானப் பணிகள் துரிதக் கதியில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும், ஒவ்வொருத் தொகுதியிலும் நிற்கின்ற வேட்பாளர்கள் அனைவரும் கலைஞர் கருணாநிதியின் வேட்பாளர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.

தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதுமே, பொங்கல் பரிசாக 2,500 ரூபாயினை பரிசாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். அதனைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களமானது தற்பொழுது சூடு பிடிக்கத் துவங்கி உள்ளது.

HOT NEWS