2024 தேர்தலில் தோனி போட்டியிட வேண்டும்! சுப்பிரமணிய சுவாமி!

16 August 2020 விளையாட்டு
subramanianswamy123.jpg

வருகின்ற 2024ம் ஆண்டு நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலில், மகேந்தரி சிங் தோனி போட்டியிட வேண்டும் என, பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, நேற்று சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருடைய ஓய்வினைப் பலரும் சோகத்துடன் ஏற்றுக் கொண்டு உள்ளனர். இந்நிலையில், இவருடைய ஓய்வு குறித்து, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்துத் தெரிவித்து உள்ளார்.

அவருடைய டிவிட்டர் பதிவில், மகேந்திர சிங் தோனி மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும். எம்எஸ் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகின்றார். ஆனால், அவர் வேறு எதில் இருந்தும் ஓய்வு பெறவில்லை. அவர் நினைத்தால், முரண்பாடுகளுக்கு எதிராகப் போராட இயலும். கிரிக்கெட்டில் தலைமை தாங்கிய தோனி, தற்பொழுது பொது வாழ்க்கையிலும் தலைமை தாங்க முன்வர வேண்டும். அவர் 2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில், போட்டியிட வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS