நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்!

18 December 2020 சினிமா
thegreyman.jpg

நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில், தமிழ் திரைப்பட நடிகர் தனுஷ் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே அன் எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் பக்கீர் என்ற, ஆங்கிலப் படத்தில் நடித்திருந்தார் தமிழ் முன்னணி நடிகர் தனுஷ். அவர் பாலிவுட் சினிமாவிலும் அவ்வப்பொழுது நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவர் தற்பொழுது மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். நெட்பிளிக்ஸ் நிறுவனமானது, புதியதாக ஹாலிவுட் ஆக்சன் படம் ஒன்றினைத் தயாரிக்க உள்ளது.

அந்தப் படத்தினை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்சர் உள்ளிட்ட மாபெரும் பிரம்மாண்டப் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்க உள்ளனர். இதற்கு தி க்ரே மேன் எனவும் பெயர் வைத்துள்ளனர். இந்தப் படதிதல் கிரிஸ் எவன்ஸ் மற்றும் ரியான் கோஸ்லிங்ஸ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த அறிவிப்பானது அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தனுஷ், தன்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார்.

இது தற்பொழுது சமூக வலைதளங்களில் நம்பர் ஒன் இடத்தினைப் பிடித்துள்ளது. தமிழ் மொழியில் இருந்து ஹாலிவுட் திரைப்படங்களில், தொடர்ந்து நடித்து வருபவராக நடிகர் தனுஷ் வளர்ந்துள்ளார் என அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS