ஸ்பார்க் இல்லாத தோனி! சிஎஸ்கேவில் ராபின் உத்தப்பா! கதறும் ரசிகர்கள்!

22 January 2021 விளயாட்டு
cskdhoni.jpg

ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் தங்களுடைய அணியில் இருந்து வீரர்கள் வெளியேறப்பட்டும் தக்க வைக்கப்பட்டும் இருக்கின்ற நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ராபின் உத்தப்பாவினை வாங்கியுள்ளது.

கடந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியானது, அமீரகத்தில் நடைபெற்றது. அங்கு சென்று ஐபிஎல் அணிகள் விளையாடின. சென்னை சூப்பர்கிங்ஸ் அணியானது, அந்த சீசனில் மிக மோசமான ஆட்டத்தினை வெளிப்படுதியது. மேலும், பல விமர்சனங்களுக்கும் உள்ளானது. தோனியின் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. வயதான வீரர்களை வைத்து, எப்படி வெல்ல இயலும் எனவும், அவர் தன்னுடைய யுக்திகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

இந்த சூழலில், இளம் வீரர்கள் பற்றி கருத்துத் தெரிவித்த தோனி, இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை எனவும், அதனால் தான் மூத்த வீரர்களை அணியில் தேர்ந்தெடுப்பதாகவும் கூறினார். இது பெரும் விவாதத்தினை ஏற்படுத்தியது. இந்த சூழலில், கெய்க்வார்டு எனும் இளம் வீரர் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி தன்னுடைய திறமையினை வெளிப்படுத்தினார். இதனால், கிரிக்கெட் விமர்சகர்களும், வீரர்களும் தோனியினை கழுவி ஊற்றினர். அடுத்த வருகின்ற சீசனில் தரமான இளம் வீரர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக, சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணியானது, தன்னுடைய வீரர்கள் பலரை அணியில் இருந்து ரிலீஸ் செய்துள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே அணியினைப் போல மற்ற அணிகளும், தங்களுக்குத் தேவையில்லாத வீரர்களை நீக்கியுள்ளனர். அதிலிருந்து, சிஎஸ்கே அணியானது ராபின் உத்தப்பாவினை தேர்ந்தெடுத்துள்ளது. இதனைப் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். கடந்த சீசனில், மிக மோசமாக விளையாடிய ராபின் உத்தப்பாவினை தேர்வு செய்துள்ளதால், சிஎஸ்கே அணியில் பெரிசுகள் தான் அதிகம் இருக்கின்றனர் எனவும், தோனியிடம் ஸ்பார்க் போய்விட்டது எனவும் நக்கலாக, இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.

HOT NEWS