pic source&credit:-twitter.com/RajArorajp/status/1259388177795518465
தற்பொழுது 62 சீஆர்பிஎப் வீரர்கள் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், வருகின்ற மே-17ம் தேதி வரை, இந்தியா முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் பரவுவது மட்டும் குறையவே இல்லை. அந்த அளவிற்கு, தற்பொழுது வேகமாகப் பரவி வருகின்றது.
இதற்கிடையில், இந்திய இராணுவத்தினரும், சிஆர்பிஎப் வீரர்களும் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெல்லியில் உள்ள 31வது படைப்பிரிவில் பணியாற்றும் சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், தற்பொழுது 194வது படைப்பிரிவினைச் சேர்ந்த 62 வீரர்களுக்கும், இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 55 வயதுடைய வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இந்திய வீரர்கள், இவ்வாறு பாதிக்கப்படுவது கவலைக்குரியதாக மாறியுள்ளது.