லண்டனில் மனிதர்கள் மீது கொரோனா மருந்து சோதனை!

25 June 2020 அரசியல்
medicallab.jpg

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு, லண்டனில் தற்பொழுது மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸானது, தற்பொழுது உலகம் முழுக்க 85 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் பரவி உள்ளது. இதனால், நான்கரை லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த நோய்க்கு, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நிறுவனங்களும், நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் தற்பொழுது கொரோனா வைரஸிற்கான மருந்தானது, மனிதர்கள் மீது சோதிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக, 300க்கும் அதிகமானோர் தன்னார்வலர்களாக தற்பொழுது முன் வந்துள்ளனர். இது குறித்து, பேசிய இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ், தன்னார்வலர்கள் இதற்காக முன் வந்து இருப்பது, தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார்.

இந்த கொரோனா வைரஸானது, ஆர்என்ஏ வகையினைச் சார்ந்தது. இதனைக் கட்டுப்படுத்துவது என்பது, சவாலான விஷயம் ஆகும். அதற்கு தற்பொழுது மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீது சோதிக்கப்படுவது அனைவருக்கும் ஆறுதலான விஷயமாகப் பார்க்கப்படுகின்றது.

HOT NEWS