ஒரே மாதத்தில் 26 லட்சம் பேருக்கு கொரோனா பரவும்! நிபுணர் குழு எச்சரிக்கை!

20 October 2020 அரசியல்
corona2ndcovid19.jpg

இந்தியாவில் ஒரே மாதத்தில் 26 லட்சம் பேர் வரை, கொரோனாவால் பாதிக்கப்படுவர் என நிபுணர் குழுவானது எச்சரித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், அந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இருப்பினும், ஊரடங்கில் பலத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறையவே இல்லை.

இதனைத் தொடர்ந்து, கான்பூரில் உள்ள தொழில்நுட்பக் கழகத்தின் உறுப்பினர், தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார். அதில், இந்தியாவில் முறையாக சமூக இடைவெளியினைக் கடைபிடித்தல் மற்றும் முகக்கவசம் அணிவதைத் தவிர்த்தால், கட்டாயம் ஒரே மாதத்தில் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 26 லட்சம் கூடுதலாகும் என்று எச்சரித்து உள்ளார்.

தொடர்ந்து, நாங்கள் பல ஆய்வுகளைச் செய்து வருவதாகவும், அதனடிப்படையில் புதிய மாதிரியினை நாங்கள் வடிவமைத்துள்ளோம். அது உடனுக்குடன் தற்பொழுது நடப்பவைகளை கணித்து துல்லியமானப் பலன்களை வழங்கி வருகின்றது. அதனை வைத்து கணித்துப் பார்த்தால், கொரோனா பரவும் வேகமாக அதிகமாக இருக்கின்றது. இதே வேகத்தில் சென்றால், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் எப்படியும் இந்தியாவில் இருக்கின்ற பாதி பேருக்கு மேல், கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS