சித்ரா கணவரின் சந்தேகப் புத்தி! தொடர் டார்ச்சர்! போலீசார் உடைத்து கூறிய உண்மைகள்!

16 December 2020 சினிமா
chitrahemanath.jpg

சித்ராவினைத் தொடர்ந்து அவருடையக் கணவர் சந்தேகப்பட்டதன் விளைவாக, சித்ரா தற்கொலை செய்து கொண்டார் எனப் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கடந்த வாரம் சின்னத்திரை நடிகை சித்ரா, சொகுசு விடுதியில் தான் தங்கியிருந்த அறையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதனால், வழக்குப் பதிவு செய்த போலீசார், அவருடையக் கணவர் ஹேமநாத்திடம் விசாரணை நடத்தி வந்தனர். இதில், போலீசாருக்கு ஹேமநாத் மீது சந்தேகம் வந்ததால் அவரிடம் ஆறு நாட்களாக விசாரணை நடத்தினர்.

அதில், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து வந்த ஹேமநாத், ஒரு கட்டத்தில் போலீசாரின் கேள்விக்குள் சிக்கிக் கொண்டார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரைப் பற்றி போலீசார் தற்பொழுது அதிர்ச்சி கலந்த தகவல்களை வெளியிட்டு உள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ரா, பலருடனும் சாதாரணமாக பழகுபவராக இருந்துள்ளார். அவருக்கு திரைத்துறையில் அதிக நண்பர்கள் இருந்துள்ளனர். ஹேமநாத், தன்னுடைய நண்பர்கள் மூலம் சித்ராவிற்கு அறிமுகம் ஆனார்.

அவர்கள் அறிமுகம் நட்பானது, பின்னர் காதலாக அது மாறியது. அதனைத் தொடர்ந்து, இருவரும் வீட்டில் இருப்பவர்களுடன் கூறி, நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இருப்பினும், இருவரும் யாருக்கும் தெரியாமல், ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டனர். திருணம் செய்து கொண்ட சில நாட்களிலேயே, சித்ராவின் மீது ஹேமநாத்திற்கு சந்தேகம் எழ ஆரம்பித்தது. தொடர்ந்து, சித்ராவுடன் பழகும் நண்பர்களுடன் சேர்த்து வைத்து, தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார்.

ஹேமநாத்திற்கு குடிப்பழக்கம் இருந்த காரணத்தால், கடுமையாகவும் நடந்து கொண்டு இருந்திருக்கின்றார். இடையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் நடித்த நடிகருடன் சேர்த்து வைத்து சந்தேகப்பட்டு உள்ளார். அவ்வப்பொழுது, சூட்டிங் செட்டிற்கு வந்து சித்ராவிடம் கடுமையாக நடந்து கொண்டு உள்ளார். அடிக்கடி தொல்லை செய்தும் இருந்துள்ளார். நீ மட்டும் எனக்குப் போதும் என சித்ரா கூறியதாகவும், ஆனால் அதற்கு நீ செத்துப் போ என ஹேமந்த் கூறியதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சித்ரா, நீ முதல்ல கிளம்பு எனக் கூறிய சித்ரா, தான் அணிந்திருந்த சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டு உள்ளார் எனக் கண்டறிந்து உள்ளனர். இதற்குக் காரணமாக இருந்த ஹேமநாத்தினை, போலீசார் சிறையில் அடைத்து உள்ளனர்.

HOT NEWS