சீனாவின் பொய்யான சமூக ஊடக பயனர்கள் ஏற்படுத்தும் குழப்பம்! உஷாரான நாடுகள்!

05 October 2020 தொழில்நுட்பம்
socialmedia.jpg

சீன அரசு தற்பொழுது சமூக ஊடகப் பயனர்களைப் பயன்படுத்தி, உலகளவில் குழப்பத்தினை ஏற்படுத்தி வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் கொரோனா வைரஸானது, தொடர்ந்து வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த வைரஸானது, சீனாவில் இருந்து பரவியது எனவும், இதற்கு சீனா தான் காரணம் எனவும், பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், சீனாவிற்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுவடைந்து வருகின்றது.

இதனை எதிர்கொள்ளும் விதமாக, சீனாவினைச் சேர்ந்த சமூக ஊடகப் பயனர்களை, சீனாவின் கம்யூனிஸ அரசு பயன்படுத்தி வருகின்றது. அங்குப் பிரபலமாக அதிகளவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும், பொதுமக்களுக்குப் பணம் கொடுத்து, அவர்களை சீனாவிற்கு சாதகமாக செய்தி வெளியிடும் படி, செய்து வருகின்றது. மேலும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் சரியாக கொரோனாவினைக் கையாளவில்லை என்று கூறும் வகையிலும் செயல்பட்டு வருகின்றது.

மேலும், இத்தாலியில் இருக்கின்ற சீனார்கள், சீன அரசிற்கு நன்றி தெரிவிப்பது போல் ட்வீட் செய்யவும் பணம் வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நான்காயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரையில் ஒரு பதிவிற்கு சீன அரசு வழங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகளவில், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களைப் பரப்பவும், பல நாடுகளுக்கு உள்ளே, குழப்பத்தினை ஏற்படுத்தவும் இவ்வாறு சீனா செய்வதாகப் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS