சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு! சீனா மீது உலக நாடுகள் அதிருப்தி!

25 April 2020 அரசியல்
isolationward.jpg

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது, என சீனா கூறியுள்ளது. இதனால், உலக நாடுகள் தற்பொழுது சீனாவின் முடிவினால் கடும் அதிருப்தியில் உள்ளன.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸால், இரண்டு லட்சம் பேர் பலியாகி உள்ளனர். 25 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்று உள்ளவர்களாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸானது, கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து பரவியதாக சீனா தெரிவித்தது. இதனை உலக நாடுகள் மறுத்து வருகின்றன.

அமெரிக்கா நேரடியாக, சீனா தான் பரப்பியது எனக் குற்றம் சாட்டியது. மேலும், ஊஹானில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து தான் பரவி இருக்கும் என்று கூறியது. இந்நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இதையே கூறின. இந்த ஆண்டு நடைபெறும், உலக சுகாதார மையத்தின் கூட்டத்தில், சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தப்படும் என, ஆஸ்திரேலியா கூறியது.

இந்த வைரஸ் விஷயத்தில், சீன அரசாங்கம் உண்மையை மறைக்கின்றது என, ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியது. இது குறித்து பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர், எங்கள் மீது பழிசுமத்துவது அர்த்தமற்றது. நாங்கள், தற்பொழுது வைரஸிற்கு எதிராகப் போராடி வருகின்றோம். சர்வதேச விசாரணை என்றுக் கூறி அரசியல் செய்கின்றனர். அதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார். இதனால், மற்ற நாடுகள் விரக்தியில் உள்ளனர்.

HOT NEWS