சீனாவின் கடன் வழங்கும் செயலிகள்! சீனாவில் இருப்பவர்களின் சதியா? அமலாக்கத்துறை விசாரணை!

04 January 2021 அரசியல்
chinaloanapp.jpg

கடன் வழங்குகின்ற சீன செயலிகளுக்குப் பின்னணியில் இருப்பவர்கள் யார் என, தற்பொழுது அமலாக்கத் துறையானது விசாரணை செய்து வருகின்றது.

இந்தியா முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக, வட்டிக்கு பணம் கொடுப்பது இருந்து வருகின்றது. நேரடியாக பணம் வழங்கியதையும் தாண்டி, ஆன்லைன் மூலமும், ஆன்ட்ராய்டு செயலிகள் மூலம் தற்பொழுது வட்டிக்குப் பணம் வங்க ஆரம்பித்து உள்ளனர். அவ்வாறு வழங்கப்படும் கடன்களுக்கு எவ்வித பணையமும் வைக்கத் தேவையில்லை. கேட்ட உடனே பணமானது, வழங்கப்படுகின்றது.

அதே போல், பணத்தினைக் கட்டாமல் காலம் தாழ்த்தும் பட்சத்தில், கடுமையாகவும் இந்த கடன் வழங்கும் செயலிகள் நடந்து கொள்கின்றன. தொடர்ந்து, தரம் தாழ்ந்த வார்த்தைகளால் திட்டுவது, இழிவாகப் பேசுவது என மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபர்கள் பலரும் தற்கொலையும் செய்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை போலீசார் இரண்டு சீனர்கள் உட்பட நான்கு பேரினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மாதம் எட்டாயிரம் ரூபாய் முதல் வேலை செய்ய பெங்களூருக்கு ஆட்கள் வருவதால், அவர்களை வைத்து கஸ்டமர் கேர் நடத்துகின்றனர். இதனைப் பயன்படுத்தி பொதுமக்களை கடன் வாங்க வைக்கின்றனர். இது குறித்து, தற்பொழுது அமலாக்கத் துறையானது விசாரணை நடத்தி வருகின்றது. இதில், கருப்புப் பணமானது, இதில் பயன்படுத்தப்படுகின்றதா எனவும், சீனாவில் இருக்கின்றவர்களுடன் இதற்குத் தொடர்பு உள்ளதா எனவும், விசாரணையானது செல்ல உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS