மொத்தம் 18 நாடுகளுடன் எல்லைப் பிரச்சனையில் ஈடுபடும் சீனா!

07 July 2020 அமானுஷ்யம்
chinamap.jpg

தற்பொழுது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில், கிழக்கு லடாக் பகுதியில் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது. நேற்று அப்பகுதியில் உள்ள இந்திய இராணுவ வீரர்களைப் பார்த்து பேசிய மோடி, லடாக் பகுதியும், கல்வான் பள்ளத்தாக்கும் இந்தியாவிற்கு சொந்தம் என்றுக் கூறியுள்ளார்.

ஏற்கனவே, சீனாவின் வெளியுறவுத்துறை செய்தியாளர் சாவோ லிஜியன் கூறுகையில், கல்வான் பள்ளத்தாக்கு சீனாவிற்கு சொந்தம் எனவும், அது சீனாவினை ஆண்ட மன்னர்களின் ஆதிக்கத்தில் இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார். சீன அரசாங்கம் புராணங்கள் மற்றும் பழைய மன்னர்களின் வரலாற்றினைச் சுட்டிக் காட்டி, அண்டை நாடுகளின் எல்லைகளைத் தங்களுடையது என நீண்ட காலமாகக் கூறி வருகின்றது.

இந்தியா மட்டுமின்றி, ஜபான், வியட்நாம், நேபாளம், வடகொரியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சிங்கப்பூர், தென்கொரியா, பூட்டான், தைவான், லாவோ, ப்ரூனே, தஜிஹிஸ்தான், கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் மங்கோலியா என மொத்தம் 18 நாடுகளுடன் எல்லைப் பிரச்சனையில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்தியா- இந்தியாவிற்கு சொந்தமான 38,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட, அக்ஷய் சின் என்றப் பகுதியினை, இந்தியா சீனாவிற்கு இடையில் நடந்த போரின் பொழுது, கைப்பற்றியது. மேலும் அது எங்களுக்கு சொந்தமானது என தற்பொழுது வரை உரிமைக் கொண்டாடி வருகின்றது. இந்நிலையில், லடாக் பகுதியிலும் தற்பொழுது பிரச்சனை ஏற்பட்டு வருகின்றது.

ஜப்பான்- பல காலமாக, தென் சீனக் கடல் பகுதியில் குறிப்பாக, சென்க்காக்கூ தீவுகள் மற்றும் ரியூக்கூயூ தீவுகள் உள்ளிட்டவைகளின் மீது ஜப்பானும் சீனாவும் உரிமைக் கொண்டாடி வருகின்றன.

வியட்நாம்- சீனாவினை 1368 முதல் 1644 வரை மிங் வம்சாவளி மன்னர்கள் ஆட்சி செய்தனர். அப்பொழுது, வியாட்நாமின் மெக்கிளீப்ல்ட் நதி, பாராசில் தீவுகள் மற்றும் ஸ்பார்ட்லீ தீவுகள் உள்ளிட்ட வியட்நாமின் பெரும்பான்மை நிலத்தினை, தன்னுடையது என, சீனா கூறி வருகின்றது.

நேபாளம்- சீனாவினை மிகவும் நெருங்கி உள்ள நாடாக நேபாளம் உள்ளது. அந்த நாடானது, திபெத்தின் ஒரு பகுதி எனவும், அதுவும் தங்கள் நாட்டுடன் தான் இருந்தது எனவும் கூறி வருகின்றது.

வடகொரியா- 1271 முதல் 1368 வரை யுவான் சாம்ராஜ்யம் சீனாவினை ஆட்சி செய்தது. இந்தக் காலக் கட்டத்தில், வடகொரியா சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், அந்த நாடு சீனாவிற்கே சொந்தம் எனவும் கூறி வருகின்றது. மேலும் அந்த நாட்டில் உள்ள, பேக்டூ மலையும் தங்களுடையது என உரிமைக் கொண்டாடி வருகின்றது.

பிலிப்பைன்ஸ்- தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும், சீனாவிற்கும் உரிமை உள்ள நிலையில், இந்தக் கடற்பகுதி தங்களுக்கு சொந்தம் என, சீனா கூறியது. இதனை எதிர்த்து, பிலிப்பைன்ஸ் அரசு, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதில் வெற்றியும் பெற்றது. இருப்பினும், தன்னுடைய இராணுவ வலிமையால், தென் சீனக் கடலில் தன்னுடைய ஆதிக்கத்தினை அதிகரித்துக் கொண்டே சீனா உள்ளது.

ரஷ்யா- ரஷ்யாவுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைபெற்றுள்ள நிலையில், அந்த நாட்டின் 1,60,000 சதுர கிலோமீட்டர்களை தங்களுடையது என, சீனா உரிமைக் கொண்டாடி வருகின்றது.

சிங்கப்பூர்- தென் சீனக் கடல் சிங்கப்பூர் மற்றும் சீனாவிற்கு சொந்தம் என இரு நாடுகளும் மோதி வருகின்றன.

தென் கொரியா- இந்த நாடு சீனாவின் கிழக்குப் பகுதி என, சீன அரசாங்கம் கூறி வருகின்றது. இதுவும் யுவான் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது என்றும் கூறி வருகின்றது.

பூட்டான்- பூட்டானின் பெரும்பகுதி திபெத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது எனவும், அதுவும் தனக்கே சொந்தம் எனவும் சீனா கூறி வருகின்றது.

தைவான்- தைவான் நாடானது, சீனாவுடன் தற்பொழுது மோதி வருகின்றது. ஆனால், சீனா மிகப் பெரிய நாடு என்பதால், அதனை தைவான் நாட்டால் வெல்ல இயலவில்லை. தைவான் நாட்டின், கடற்பகுதிகள், அழகியத் தீவுகள், உள்ளிட்டவைகளை தங்களுடையது என சீனா உரிமைக் கொண்டாடி வருகின்றது.

லாவோ-யுவான் சாம்ராஜ்யத்தின் கீழ் லாவோ தீவானது, தங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாக அதன் மீதும், சீனா உரிமைக் கூறி வருகின்றது.

ப்ரூனே-இதன் ஸ்ப்ராட்லி தீவுகளை தன்னுடையது என, சீனாக் கூறி வருகின்றது.

தலிகிஸ்தான்- குயிங் சாம்ராஜ்யத்தின் கீழ் இது இருந்ததாகவும், இது தற்பொழுது தங்களுக்கே சொந்தம் எனவும், சீனாக் கூறி வருகின்றது.

கம்போடியா- மிங் சாம்ராஜ்ஜியத்தின் கீழ், கம்போடியா செயல்பட்டதாகவும், இதில் தற்பொழுது தங்களுக்கு உரிமை உள்ளது எனவும் சீனா உரிமைக் கோரி வருகின்றது.

இந்தோனேஷியா- இதன் தென் சீனக் கடற்பகுதிகளை, தங்களுக்கு சொந்தம் என சீனா கேட்டு வருகின்றது.

மலேசியா-ஸ்பார்ட்லி தீவுகள் உட்படப் பலப் பகுதிகளை, தங்களுக்கு சொந்தம் என, சீனா மலேசியாவிடம் கேட்டு வருகின்றது.

மங்கோலியா-இது யுவான் சாம்ராஜ்ஜியத்தின் கீழ் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், இதுவும் தங்களுக்கே சொந்தம் எனவும், சீனா கூறி வருகின்றது.

HOT NEWS