சேங் ஈ 5 நிலவில் இருந்து கற்களுடன் சீனாவிற்கு திரும்பியது! சீனா சாதனை!

18 December 2020 தொழில்நுட்பம்
satellite-3977.jpg

சீனாவின் சேங் ஈ 5 விண்கலமானது, நிலவில் இருந்து கற்களுடன் சீனாவிற்கு திரும்பி சாதனை படைத்து உள்ளது.

உலகின் இரண்டாவது வல்லரசாக மாறியுள்ள சீனா, தன்னுடைய விண்வெளி ஆய்வில் அமெரிக்காவிற்கு போட்டியாகப் பல சாதனைகளை செய்து வருகின்றது. நிலவில் முதன் முதலாக கொடியேற்றியப் பெருமையானது, அமெரிக்காவினையே சாறும். அதே போல், தற்பொழுது சீன விண்கலமானது, தன்னுடைய ரோவர்கள் மூலம் நிலவில் தன்னுடையக் கொடியினை ஏற்றியுள்ளது.

சீனாவின் விண்வெளி ஆய்வு மையமானது, சேங் ஈ 5 என்ற விண்கலத்தினை, நிலவிற்கு அனுப்பியது. அங்கு சென்ற சேங் ஈ 5 விண்கலமானது, தன்னுடைய ரோவர்களை நிலவில் வெற்றிகரமாகத் தரையிறக்கியது. அந்த ரோவர்கள், புவியில் இருந்தபடியே கட்டுப்படுத்தபட்டன. அவைகள், சீனாவின் கொடியினை நிலவில் நட்டனர். அதனைத் தொடர்ந்து சுமார் 2 கிலோ எடையுள்ள நிலவின் கற்களை எடுத்துக் கொண்டு, புவிக்குத் திரும்பும் பணியில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிற்றுக் கிழமை நிலவினை சுற்றி வந்த சேங் ஈ5 விண்கலத்தின் திசையானது, சீனாவினை நோக்கித் திருப்பப்பட்டது. அந்த விண்கலமானது, மெதுவாக தன்னுடையத் திசையினை மாற்றிக் கொண்டு புவியினை நோக்கி, தன்னுடைய ரோவர்களுடன் பயணத்தினைத் துவக்கியது. இது நேற்று வெற்றிகரமாக, சீனாவினை வந்தடைந்தது. இதிலிருந்து நிலவில் சேகரிக்கப்பட்ட 2 கிலோ எடையுள்ள கற்களை விஞ்ஞானிகள் கைப்பற்றினர்.

இது நிலவில் நடைபெற்ற ஆய்வுகளில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகின்றது. இதனை இதற்கு முன்னர், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை மட்டுமே செய்துள்ள நிலையில், மூன்றாவதாக சீனாவும் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS