நிலவில் உள்ளது போல் செயற்கை பள்ளங்கள்! சந்திரயாண் 3 திட்டம் தீவிரம்!

04 September 2020 தொழில்நுட்பம்
sivan.jpg

நிலவில் உள்ள அமைப்பினை போல, செயற்கையானப் பள்ளங்களை உருவாக்க இஸ்ரோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு, இந்தியாவின் சார்பில் சந்திராயன் 2 விண்கலமானது, நிலவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக சந்திராயன் 2 திட்டமானது, தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த முறை மிகத் துல்லியமாக, தன்னுடைய அடுத்தத் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு இஸ்ரோ தீவிரம் காட்டி வருகின்றது.

வருகின்ற 2021ம் ஆண்டு சந்திராயன் 3 திட்டத்தினை செயல்படுத்துவதற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த முறை நடைபெற்ற தோல்வியானது இந்த முறை இருக்கக் கூடாது என, ஒவ்வொரு செயலையும் ஆய்வு செய்து உருவாக்கி வருகின்றது. இதற்காக பெங்களூரு நகரில் இருந்து, சுமார் 215 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாலக்கிரே என்றப் பகுதியில் நிலவினைப் போன்ற போலியான தரைதளம் உருவாக்கப்பட்டு வருகின்றது.

இந்த பகுதியில், நிலவின் தரைதளத்தினைப் போல உருவாக்கப்படுவதன் மூலம், அங்கு லேண்டரை இறக்கி ஆய்வு செய்ய இயலும். இதற்காக 25 லட்ச ரூபாயானது ஒதுக்கப்பட்டு உள்ளது. இது 10 மீட்டர் அகலமும், 3 மீட்டர் ஆளமும் உள்ளதாக தயார் செய்யப்பட்டு வருகின்றது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS