மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மரணம்! தலைவர்கள் இரங்கல்!

09 October 2020 அரசியல்
ripramvilaspaswan.jpg

மத்திய அமைச்சரும் லோக் ஜன சக்தி கட்சியின் தலைவருமான, ராம் விலாஸ் பாஸ்வான் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

74 வயதுடைய ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து, வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், திடீரென்று உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும், அவர் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து டிவீட் செய்துள்ள அவருடைய மகன் சிராக் பாஸ்வான், அக்டோபர் 8ம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக தெரிவித்து உள்ளார்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்காக தொடர்ந்து போராடிய பாஸ்வான், தொடர்ந்து 10 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய மறைவிற்கு பாரதப் பிரதமர் மோடி உட்படப் பலரும், தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து உள்ளனர்.

HOT NEWS