ஒலிம்பிக்கில் இடம்பெற்ற பிரேக் டான்ஸ்! 2024 பயன்படுத்த அனுமதி!

08 December 2020 விளையாட்டு
breakdance.jpg

வருகின்ற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில், பிரேக் டான்ஸிற்கு அனுமதி அளித்துள்ளது ஒலிம்பிக் கமிட்டி.

இந்த ஆண்டு ஜப்பான் நாட்டில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டியானது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. வருகின்ற 2021ம் ஆண்டு ஜப்பான் நாட்டில், இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும் என கூறப்பட்டு உள்ளது. இது குறித்துப் பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பக், ஜப்பானில் 2021ம் ஆண்டு திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என்றுத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட உள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டியில் உலகிலேயே முதன் முறையாக நடனம் மற்றும் விளையாட்டு ஆகியவைகளை உள்ளடக்கிய, பிரேக் டான்ஸிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் 16 ஆண்களும், 16 பெண்களும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது. இதனால், பல இளைஞர்கள் இந்த ஒலிம்பிக்கினைக் காண வருவர் எனத் தெரிவித்தார். மேலும் ஸ்கேட்போர்டிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் உள்ளிட்டவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.

HOT NEWS