பாஜக தலைமையில் தான் 2021க்கான கூட்டணி! DMK VS BJP!

12 August 2020 அரசியல்
vpduraisamy.jpg

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியே அமையும் என, தமிழக மாநில பாஜக துணைத்தலைவர் விபிதுரைசாமி தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற 2021ம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், அதிமுகவில் அடுத்த முதல்வர் பதவிக்கான வேட்பாளர் யார் என்ற உள்கட்சி விவகாரம் தலைதூக்கி உள்ளது. அங்கு அப்படி என்றால், திமுகவில் தேர்தலுக்கானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த சூழ்நிலையில், தமிழக பாஜகவினர் தற்பொழுது புதியதாக தங்களுடையக் கருத்தினைக் கூறியுள்ளனர். தமிழக பாஜக தலைவர் விபி துரைசாமி, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. ஆதலால், பாஜக தலைமையிலான கூட்டணி அமையும். மேலும் அவர் பேசுகையில், இந்த முறை திமுகவிற்கும் பாஜகவிற்குமே போட்டி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் முருகன், அதிமுக பாஜக கூட்டணியானது, வருகின்ற 2021ம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS