சூத்திரர்கள் தான் சனாதனத்தை ஏற்று கொள்வதில்லை! பிராக்யா தாகூர் அதிரடி!

16 December 2020 அரசியல்
pragyathakur.jpg

சூத்திரர்கள் என்பதை சூத்திரர்கள் தான் ஏற்றுக் கொள்வதில்லை என, பாஜக எம்பி பிராக்யா தாகூர் கூறியுள்ளார்.

எப்பொழுதும் சர்ச்சைக்குரியக் கருத்துக்களை கூறியே, இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிராக்யா தாகூர். இவர் தற்பொழுது அதிரடியாக தன்னுடையக் கருத்து ஒன்றினைக் கூறியுள்ளார். மேற்கு வங்கத்திற்கு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா சென்ற பொழுது, அவருடையக் காரின் மீது, கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற்றது. அது குறித்துப் பேசுகையில், மம்மதா பேனர்ஜிக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இது பாகிஸ்தான் அல்ல இது இந்தியா. இந்தியாவினை இந்துக்கள் பாதுகாத்து வருகின்றனர். அவர்கள் தக்க பதிலடியினை மம்மதாவிற்குத் தருவார்கள்.

மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மம்மதாவின் ஆட்சியானது விரைவில் முடிவிற்கு வந்துவிடும். இதே போல் அவர் பேசுகையில், சனாதன தர்மத்தினை, சூத்திரர்கள் தான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், பிராமணர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் இந்த சனாதன தர்மத்தினை ஆதரிக்கின்றனர். சத்திரியனை சத்ரியன் என்றுக் கூறினால், அவர்கள் கவலைப்படுவதில்லை. வைசியர் என்று, வைசியரைக் கூறினால் அவர்கள் கவலைப்படுவதில்லை. அதே போல், பிராமணர்களை பிராமணர்கள் எனக் கூறினால், அவர்களும் கவலைப்படுவதில்லை. ஆனால், சூத்திரர்களை சூத்திரர்கள் எனக் கூறினால், அவர்கள் வருத்தப்படுகின்றனர் எனத் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS