பிக்பாஸ்4 இவங்க தான் வரப் போறாங்க!

21 August 2020 சினிமா
biggboss4kamal.jpg

இன்னும் சில வாரங்களில் விஜய் டிவியில் பிக்பாஸ்4 நிகழ்ச்சியானது, மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கடந்த முறை நடைபெற்ற பிக்பாஸ் போட்டியானது, யாரும் எதிர்பாராத வகையில், மிகப் பெரிய வெற்றியினை அடைந்தது. அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது வனிதா, மற்றும் லஸ்லியா உள்ளிட்டோர் ஆவார்கள். இந்த முறை அதே போல, விறுவிறுப்பாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதற்கு முக்கியக் காரணமாக இருப்பது, இந்த முறைப் பங்கேற்கும் போட்டியாளர்களே.

கடந்த பிக்பாஸ் சீசன்3யில் ஆவது, போட்டி நடக்கின்ற காலத்தில் தான், சர்ச்சைகள் எழுந்தன. ஆனால், இந்த முறை, சர்ச்சையில் சிக்கியுள்ள மனிதர்கள் தான், பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சிக்குள்ளேயே பங்கேற்க உள்ளனர். வனிதா தற்பொழுது நான்காவது இல்லை மூன்றாவது, இல்லை ஏதோ ஒரு திருமணத்தினை செய்துள்ளார். அவரை சமூக ஊடகங்கள் மூலம் கடுமையாகத் தாக்கிப் பேசி வந்த சூர்யா தேவி என்பவர், தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

அதே போல், பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் பங்கேற்ற தர்ஷனின் முன்னாள் காதலி சனம் செட்டியும் பங்கேற்க உள்ளார். விஜய் டிவியின் கோபிநாத் பங்கேற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, கிசுகிசுக்கப்படுகின்றது. மேலும், விஜய் டிவியின் காமெடி நடிகரான நாஞ்சில் விஜயனும் இதில் பங்கேற்க உள்ளார். விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நடிகை ரம்யா பாண்டியனும் பங்கேற்கின்றார்.

ஜெமினி, வில்லன் படங்களில் நடித்த நடிகை கிரண், இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். ரோபோ சங்கரின் மனைவி இந்திரஜா கலந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நடிகை சிவானி நாராயணனும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர், மீராமிதுனுடன் சண்டையிட்டு வரும் அஹமத் மீரான், நந்தினி சீரியலில் நடித்த ராகுல் ரவீந்திரன், சினிமா நடிகர் கொட்டாச்சி உள்ளிட்டோர் கலந்து கொள்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றன.

மேலும், லெட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை விஜயலட்சுமி கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. இன்னும் சில வாரங்களில் இது குறித்தப் பரபரப்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS