சீனாவில் மீண்டும் கொரோனா! பல லட்சம் பேரிடம் சோதனை செய்ய திட்டம்!

16 June 2020 அரசியல்
coronalockdown1.jpg

சீனாவின் பீஜிங் நகரில் தற்பொழுது மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.

சீனாவில் உள்ள ஹூபெய் மாகாணாத்தின் ஊஹான் பகுதியில் இருந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவ ஆரபிம்த்தது. இந்த வைரஸ் தற்பொழுது உலகம் முழுக்கப் பரவி உள்ளது. இந்த வைரஸ் காரணமாக, 80 லட்சம் பேர் உலகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், 4 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்த சூழ்நிலையில், பல நாடுகள் சீனாவின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.

சீனாவில் உள்ள, ஊஹான் பகுதிக்கு அருகில் உள்ள வைரஸ் ஆய்வுக் கூடத்தில் இருந்து தான், இந்த வைரஸ் பரவி இருக்கும் எனப் பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், சீனாவில் கிட்டத்தட்ட கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது சீனாவில் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளன என, விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர். இந்த சூழ்நிலையில், தற்பொழுது சீனாவில் இந்த வைரஸானது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த வைரஸால், தற்பொழுது பீஜிங் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள அனைத்துக் கடைகளும், பொது இடங்களும் அடைக்கப்பட்டு உள்ளன. மேலும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரிடமும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என சோதிக்க சீனா முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, இந்த வைரஸ் தொற்று அதிகரித்து இருப்பது உறுதியாகி உள்ளது.

சீனாவில் 400க்கும் மேற்பட்டவர்களிடம் புதிதாக தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், 170க்கும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகளிடமும் இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக, பீஜிங் நகரில் உள்ள ஜின்பாடி சந்தையின் மூலம், இந்த வைரஸானது அதிகளவில் பரவி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், பீஜிங் நகரில் உள்ள சந்தைகள் மூடப்பட்டு உள்ளன.

அந்த சந்தைக்குச் சென்று வந்தவர்கள் யார் யார் என, விசாரணை செய்து அவர்களை தனிமைப்படுத்தி வருகின்றனர். வருகின்ற அக்டோபர் மாதம், சீனாவில் கொரோனா வைரஸின் 2வது அலைப் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்திருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் பரவ ஆரம்பித்துள்ள கொரோனாவால் சீன அரசாங்கம் கலக்கத்தில் உள்ளது.

HOT NEWS