அரியர் விவகாரத்தில் குழப்பம்! ஆன்லைனில் தேர்வுக்கு பதிவு செய்யும் மாணவர்கள்?

05 December 2020 அரசியல்
annauniversity1.jpg

அரியர் விவகாரம் தொடர்பாக பலரும் குழப்பான சூழ்நிலையில் உள்ள நிலையில், தற்பொழுது டிசம்பர் மாதம் நடைபெறுகின்ற செமஸ்டர் தேர்விற்கு அனைத்து அரியர் மாணவர்களும் தேர்வுக் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற வேண்டியிருந்த செமஸ்டர் தேர்வானது, கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், தேர்விற்காக கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனவும், அரியர் மாணவர்களும் தேர்ச்சிப் பெறுவதாகவும் அறிவித்தார். இதனால், பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களுடைய ஆதரவினையும், நன்றியினையும் தெரிவித்து உள்ளனர்.

இந்த சூழலில், இது சட்டப்படி தவறு எனவும், இவ்வாறு செய்யக் கூடாது எனவும், அண்ணாப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் சூரப்பா, ஏஐசிடிஇ நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதினார். அப்பொழுது ஆரம்பித்தது தலைவலி. ஏஐசிடிஇ மற்றும் யூஜிசி ஆகியவை இந்த அரியர் தேர்ச்சி செல்லாது எனவும், அவ்வாறு அரியர் தேர்ச்சியினை அனுமதித்தால், ஏழு லட்சம் பேர் பாஸ் செய்வர் எனவும், அவர்களின் அறிவும், கல்வியும் கேள்விக் குறியாகும் எனக் கூறினர். இந்த சூழலில், அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், அரியர் தேர்ச்சி அறிவிப்பினை ரத்து செய்ய வேண்டும் எனவும் புதிய தேர்வின இந்த வழக்கானது, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு விசாரணைக்கு வந்தது. பல முறை விசாரணை நடைபெற்ற நிலையில், நேற்று நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வானது புதிய அறிவுரை ஒன்றினை வழங்கியுள்ளது. அதில் மாணவர்களின் நலன் கருதி, துணைவேந்தரும், தமிழக அரசும் நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என்றுக் கூறியுள்ளது. சூரப்பா மீது தொடர்ந்து ஊழல் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த சூழலில், இந்த வழக்குக் குறித்த விசாரணையானது வருகின்ற ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால், அரியர் தேர்வு ரத்தா அல்லது நடத்தப்படுமா என்றக் கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில், தற்பொழுது வருகின்ற வாரங்களில் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுடன் சேர்த்து, அரியர் தேர்வுகளை ஆன்லைனிலோ அல்லது ஆஃப்லைனிலோ நடத்திக் கொள்ளலாம் எனவும் கூறியது. இதனைத் தொடர்ந்து, தற்பொழுது தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்காக வலைப்பக்கம் திறக்கப்பட்டு உள்ளது.

இதனால், அரியர் மாணவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். சுமார் ஏழு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த முடிவினால் கலக்கம் அடைந்துள்ளனர். இது எடப்பாடி அரசுக்கு பெரும் பின்னடைவினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS