பாலிவுட்டில் ரகுமானுக்கு எதிராக சதி! ரகுமான் அதிரடி கருத்து!

27 July 2020 சினிமா
arrahmanabused.jpg

எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கூட்டமே செயல்பட்டு வருகின்றது என, இசைப்புயல் ஏஆர்ரகுமான் கூறியுள்ளார்.

பாலிவுட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மொழி ரசிகர்களாலும் விரும்பப்படும் நபராக ஏஆர்ரகுமான் இருந்து வருகின்றார். அவருக்கென, உலகம் முழுவதும் தனி ரசிகர் படையே உள்ளது. அவர் சமீபத்தில் இசையமைத்த தில் பெசாரா என்றப் படம் வெளியாகி உள்ளது.

அந்தப் படம் குறித்து, தனியார் நிறுவனத்திற்கு அவர் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், தில் பெசாரா படத்தின் இயக்குநர் ஏஆர் ரகுமானிடம் இசையமைக்கக் கூறியிருக்கின்றார். அப்படத்திற்கு, 2 நாட்களில் இசையமைத்துக் கொடுத்ததாக ரகுமான் கூறியுள்ளார். அப்பொழுது அப்படத்தின் இயக்குநர், உங்களைப் பற்றி பலரும், பலவிதமாகக் கூறி வருகின்றனர். அவர்கள் உங்களிடம் செல்ல வேண்டாம் என்றுக் கூறினர் என்றார்.

எனக்கு எதிராக அவர்கள், அவர்களுக்குத் தெரியாமலேயே இந்தத் தவறைச் செய்கின்றனர். இருப்பினும் இதனையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன். எனக்கு விதியின் மீது நம்பிக்கை உள்ளது. எல்லாமே கடவுளிடம் இருந்து தான் வருகின்றது. நான் கடவுளை நம்புகின்றவன். என்னிடம் வரும் படங்களுக்கு நான் இசையமைக்கின்றேன். நான் அனைவரையும் வரவேற்கின்றேன். என்று ஏஆர் ரகுமான் கூறுகின்றார். கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 8 பாலிவுட் படங்களுக்கே, ரகுமான் இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS