கொரோனா அப்பளம் விற்ற பாஜக அமைச்சருக்கு கொரோனா!

10 August 2020 அரசியல்
arjunrammeghwal.jpg

பாப்ஜி அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வராது என்றுக் கூறிய பாஜக அமைச்சருக்கு, தற்பொழுது கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, ருத்ர தாண்டவம் ஆடி வருகின்றது. இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில், பாஜக கட்சியின் உறுப்பினரும், ராஜஸ்தான் மாநில எம்பியுமான அர்ஜூன் ராம் மெக்வால் என்பவர் புதிதாக அப்பளம் ஒன்றிற்கு விளம்பரம் செய்தார்.

அதில், இந்த பாப்ஜி அப்பளத்தினை சாப்பிட்டால், கொரோனா வராது எனவும், இருக்கின்ற கொரோனா சரியாகிவிடும் எனவும் தெரிவித்தார். இதற்கு இந்தியா முழுவதும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர் தன்னுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இது குறித்த, பதிவினை வெளியிட்டு உள்ளார்.

அவருக்கு முதலில் நடத்தப்பட்ட சோதனையில் அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும், பின்னர் 2வது முறை நடைபெற்ற சோதனையில் லேசான அறிகுறிகள் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதனால், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவிற்கான சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

HOT NEWS