உங்கள் உடலில் இந்த வளையங்கள் இருக்கா? அப்போ நீங்க அழகு தான்!

28 December 2020 உடல்நலம்
venusholes.jpg

ஆண் பெண் ஆகிய இருவரும் அழகினை விரும்புகின்றனர். உண்மையில் நம்முடைய அழகினை உறுதி செய்வதற்கு ஒரு சில விஷயங்கள் உள்ளன. அவைகளைக் கவனித்தாலே, நாம் அழகாக இருக்கின்றோமா இல்லையா என, எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரது உடலிலும் பொதுவான விஷயங்கள் இருக்கின்றன. இடுப்பின் பின் பகுதியில் உள்ள இரண்டு குழி போன்ற அமைப்பினை, பொதுவாக நம்மால் காண இயலும். இதற்கு குழி எனப் பெயர் வைத்துள்ளனர். ஆண்களின் உடலில் இருந்தால் அப்பல்லோ ஹோல்ஸ் எனவும், பெண்களின் உடலில் இருக்கின்ற இதற்கு வீனஸ் ஹோல்ஸ் எனவும் பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

தமிழில் கூற வேண்டும் என்றால், குரு வளையம் அதாவது வியாழ வளையம் என ஆண்களுக்கும், சுக்கிர வளையம் என பெண்களுக்கும் பெயர் உண்டு. இது, ஒரு மனிதரின் தனித்தன்மையினையும், அழகினையும் குறிக்கக் கூடிய விஷயமாகும். அதற்குக் காரணமாக இருப்பது உடல் எடையும், இடுப்புப் பகுதியில் அமைந்துள்ள எலும்புமே ஆகும்.

ஆண்களின் இடுப்பு எலும்பு வி வடிவத்திலும், பெண்களின் இடுப்பு எலும்பானது யூ வடிவத்திலும் இருக்கும். இதன் காரணமாகவே, இந்த வளையமானது ஏற்படுகின்றது. பெண்களின் இடுப்புப் பகுதியில் இந்த வளையம் இருப்பதன் விளைவாக, அவர்கள் அதிக அழகுள்ளவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இந்த வளையம் உள்ளப் பெண்கள், இயற்கையான அழகினை உடையவர்களாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கின்றனர் என, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த வளையங்களின் காரணமாக பெண்களின் உடலில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் எனவும், இரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் தான் இந்த வளையங்கள் ஏற்படும் எனவும் கூறப்படுகின்றது. உடலில் அதிகளவில் கொழுப்பு இல்லாமல் இருக்கின்றபட்சத்தில் மட்டுமே, இந்த வளையமானது இடுப்புப் பகுதியில் ஏற்படும் என்றுக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வளையம் உள்ளப் பெண்களுக்கு, அதிகளவில் உணர்ச்சி உண்டாகும். எளிதாக, பாலியல் உணர்வு ஏற்படும். அது குடும்ப வாழ்க்கைக்கும், தாம்பத்திய சுகத்திற்கும் பயன்படும் எனவும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆண்களின் உடலிலும், இந்த வளையங்கள் இதே தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. இடுப்பு எலும்பில் உள்ள வித்தியாசத்தினைத் தவிர்த்து மற்ற அனைத்துமே அதே பலன்களையே வழங்குகின்றன. இந்த வளையங்கள் இயற்கையாக மட்டுமே அமையக் கூடியவை. யாராலும் இதனை உடற்பயிற்சி செய்தோ அல்லது செயற்கையாகவோ உருவாக்க இயலாது. ஒரு சில சமயங்களில், உடல் எடை அதிகமாகக் கூடி விடும். அப்பொழுது மட்டும் உடற்பயிற்சி செய்வதன் விளைவாக இதனை உருவாக்கிக் கொள்ள இயலும்.

HOT NEWS