அண்ணா பல்கலைக் கழகம் இறுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது!

04 August 2020 அரசியல்
annauniversity.jpg

தற்பொழுது அண்ணா பல்கலைக் கழகம் இறுதிப் பருவத் தேர்வு குறித்த, முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் தொடங்கு, ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறாமல் உள்ளன. இவைகள் தற்பொழுது பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் செமஸ்டர் தேர்வினை வைத்து முடித்திருக்க வேண்டும் என, யூஜிசி தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் அனைத்து செமஸ்டர்களும் ரத்து செய்யப்படுவதாகவும், இறுதி செமஸ்டர் தேர்வு மட்டும் கட்டாயம் நடைபெறும் எனவும் கூறினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது குறித்து, தற்பொழுது அண்ணாப் பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 5 அலகுகள் நடத்தப்படாமல், வெறும் 4 அலகுகளே நடத்தப்பட்டு உள்ளதால், நான்கு அலகுகளுக்கு மட்டும் தேர்வுகள் நடைபெற உள்ளது.

மேலும், 30 மதிப்பெண்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடைபெற இருப்பதாகவும், இணைய வசதி இல்லாத மாணவர்கள், சூழ்நிலை சரியான உடன் எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS