நடிகை வனிதாவிற்கு 3வது திருமணம்! 27ம் தேதி திருமணம்!

19 June 2020 சினிமா
vanithamarriage.jpg

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான நடிகை வனிதாவிற்கு மூன்றாவது திருமணம் நடைபெற உள்ளது உறுதியாகி உள்ளது.

தளபதி விஜயுடன் 1995ல் வெளிவந்த சந்திரலேகா படத்தில் அறிமுகமானார் வனிதா. தொடர்ந்துப் பலப் படங்களில் நடித்து வந்த வனிதா, 2000ம் ஆண்டு ஆகாஷ் என்ற நபரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, விவாகரத்து பெற்றார்.

பின்னர் மீண்டும் 2007ம் ஆண்டு 2வது திருமணம் செய்தார். அதுவும் 2010ம் ஆண்டு முடிவிற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, குழந்தைகளுடன் தன்னுடைய வாழ்க்கையினை செலவிட்டு வந்தார். அவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகனை அவருடைய முன்னாள் கணவருடன் அனுப்பிவிட்டார். இந்த சூழ்நிலையில், தற்பொழுது வனிதாவுடன் இரண்டு மகள்கள் வசித்து வருகின்றனர்.

இவ்வளவுப் பிரச்சனைகளுக்கு இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நடிகை வனிதா கலந்து கொண்டார். அவ்வளவு தான், நிகழ்ச்சியின் டிஆர்பி அடித்துத் தூக்கியது. பின்னர், தற்பொழுது பல டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட வனிதாவிற்கும், பீட்டர் பால் என்ற இயக்குனருக்கும் காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து, நடிகை வனிதா வருகின்ற ஜூன் மாதம் 27ம் தேதி அன்று, பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

விரைவில், இது குறித்து தாம் அறிவிக்க உள்ளதாகவும், திருமணம் முடிந்த உடன், திருமண வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடுவதாகவும், திருமணமானது குடும்பத்தார் முன்னிலையில் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS