பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அக்ரீமெண்ட்! திடீரென்று வரமாட்டேன் என்ற அஸீம்! இது தான் காரணமாம்!

14 December 2020 சினிமா
actorazeem.jpg

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இரண்டு மாதங்களைக் கடந்து, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் வைல்ட் கார்ட் மூலம் பங்கேற்க இருந்த அஸீம், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார்.

தமிழக மக்கள் அனைவரும் பார்த்து வருகின்ற பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியில், தற்பொழுது வைல்ட் கார்டு என்ட்ரீக்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம், ஜித்தன் ரமேஷ், ஆகியோர் வெளியேறிவிட்டனர். வைல்ட் கார்டு என்ட்ரீயில் உள்ளே வந்த அர்ச்சனாவால் இந்த நிகழ்ச்சியில், பெரிய அளவில் பரபரப்பினை ஏற்படுத்த முடியவில்லை.

அவரைத் தொடர்ந்து, சுச்சீ லீக்ஸ் மூலம் தமிழக சினிமாவில் பரபரப்பினை ஏற்படுத்திய சுசித்ராவும் வைல்ட் கார்டு என்ட்ரீயாக உள்ளே வந்தார். அவராலும் பெரிய அளவில் பரபரப்பான விஷயங்கள் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது வைல்ட் கார்டு என்ட்ரீயாக நுழைவதற்கு நடிகர் அஸீம் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அவருடன் ஒப்பந்தமானது கையெழுத்தானது. அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார்.

அவர் இது குறித்து கூறுகையில், சில தவிர்க்கப்படாத காரணங்களுக்காக நான் பங்கேற்கவில்லை. இதற்கு மேல் என்னால் இது குறித்துக் கூற இயலாது. என்னை மன்னியுங்கள் எனக் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் தரமானது, நாளுக்கு நாள் குறைந்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS