pic credit:twitter.com/IYC/status/1278925309912518659
உத்திரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் போலீசாருக்கும், ரவுடிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில், டிஎஸ்பி உள்ளிட்ட எட்டு போலீசார் கொலை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள பிக்ரு என்றப் பகுதியில், விகாஸ் தூபே என்றப் பிரபல ரவுடி தன்னுடையக் கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பதாக, போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இரகசியமாகச் சென்றப் போலீசார் ரவுகளைப் பிடிக்க முயற்சி செய்தனர்.
போலீசார் வந்துள்ளதை அறிந்த ரவுகள், தாங்கள் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரைப் பார்த்து சராமாரியாக சுட்டனர். அவர்களுக்குப் பதிலடித் தர போலீசாரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இருப்பினும், ரவுகள் நிறைய பேர் இருந்ததால், போலீசாரால் சமாளிக்க இயலவில்லை. ரவுகள் தாக்கியதில், டிஎஸ்பி உட்பட சுமார் எட்டு போலீசார் மரணம் அடைந்தனர். இது தற்பொழுது, இந்திய அளவில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.