திருப்பதியில் 743 பேருக்கு கொரோனா! 3 பேர் பலி!

10 August 2020 அரசியல்
thirupathi.jpg

திருமலை திருப்பதி கோயிலில் பணிபுரிந்த 743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் பலியாகி உள்ளனர்.

உலகின் பணக்காரக் கோயிலாக இருப்பது திருப்பதி திருமலைக் கோயில். இந்தக் கோயிலானது, தற்பொழுது கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு மத்தியிலும், திறக்கப்பட்டு உள்ளது. மார்ச் மாதம் இந்தியா முழுவதும் நாடு தழுவிய ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இதனால், திருப்பதி கோயிலும் மூடப்பட்டது.

இந்த சூழ்நிலையில், கோயிலில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாதக் காரணத்தால், அந்தக் கோயிலினைத் திறக்க கடந்த ஜூன் 11ம் தேதி அன்று, அம்மாநில அரசு அனுமதி வழங்கியது. பல விதிகள் அங்கு தரிசிக்க வரும் பக்தர்களுக்காக உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், அந்தக் கோயிலின் உண்டியல் வருமானம் மட்டும் குறையாமல் வந்து கொண்டே இருந்தன.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அந்தக் கோயிலுக்குள் பணிபுரிந்தப் பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட ஆரம்பித்தது. இதனால், அந்தக் கோயில் திறக்கப்பட்டதுக் குறித்து பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த நிலையில், அந்தக் கோயிலின் அர்ச்சகர்கள், பாதுகாவலர்கள், நிர்வாகிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்பொழுது வரை, திருமலை திருப்பதியில் பணிபுரிந்த 773 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், அதில் 402 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 338 பேர் தற்பொழுது சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது. மேலும், இந்த வைரஸ் தொற்றுக் காரணமாக 3 பேர் பலியாகி இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

HOT NEWS