வருகின்ற ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்து ஒலிம்பிக் போட்டியானது, 2021ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவில் இருந்து உலகம் முழுக்க கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவ ஆரம்பித்தது. தற்பொழுது வரை 4,00,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், 16,000க்கும் அதிகமானோர் மரணமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுமா என்றக் கேள்வி எழுந்தது. இது குறித்து நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்குப் பிறகு, அதன் தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்பொழுது அறிவித்துள்ளார். வீரர்களின் நலம் கருதியும், பார்வையாளர்களின் நலம் கருதியும் இந்த ஆண்டு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டியானது, அடுத்த ஆண்டு 2021 கோடை விடுமுறைக்கு மாற்றப்படுவதாக அறிவித்தார்.
இதனால், ஜப்பான் நாட்டிற்கு பொருளாதார வகையில், பெரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒலிம்பிக் போட்டியானது, உடல்நலம் கருதி தள்ளி வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர், உலகப் போரின் பொழுது மட்டுமே, ஒத்திவைக்கப்பட்டது.