சீனாவில் அடுத்த பயங்கரம்! டேம் உடைப்பு! 140 பேர் பலி! வெள்ளத்தால் பயங்கரம்!

20 July 2020 அரசியல்
floodwater.jpg

சீனாவில் கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக, கடுமையான கன மழையானது பெய்து வருகின்றது. இதனால், அந்நாட்டில் பல நூறு பலியாகி உள்ளனர்.

சீனாவில் தற்பொழுது தான், கொரோனா வைரஸ் தொல்லை முடிவிற்கு வந்துள்ள நிலையில், தற்பொழுது அங்கு கனமழைப் பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்து உள்ளது. அங்கு உள்ள ஜிலின், அன்குய், திபெத் மற்றும் லியானிங் உள்ளிட்டப் பல மாகாணங்களில் கனமழைப் பெய்து வருகின்றது. இந்தக் கனமழைக் காரணமாக, சீனாவின் ஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

இந்த மழை வெள்ளத்தால், கரைப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். சீனாவின் பெரிய நதியான யாங்ஷி நதியில், பல அடி உயரத்திற்கு வெள்ள நீர் பாய்ந்து ஓடிக் கொண்டு இருக்கின்றது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பலரைக் காணவில்லை என்றப் புகாரும் எழுந்துள்ளது.

தற்பொழுது வரை, அங்கு பெய்து வருகின்ற கனமழைக்கு 140 பேர் பலியாகி உள்ளனர். இந்த நதியில் பல அணைகள் கட்டப்பட்டு உள்ளன. அதனால், வெள்ள நீரை வெளியேற்றும் பொருட்டு, அணை ஒன்றினை அரசாங்கம் தரப்பில் இருந்து, அதிகார்கள் அங்கு உள்ள அணையினை வெடி வைத்துத் தகர்த்து உள்ளனர். இதனால், வெள்ள நீரானது வேகமாக வெளியேறி வருகின்றது.

HOT NEWS