இந்தியப் பெருங்கடலில் 120 போர்கப்பல்கள்! இந்திய தளபதி அதிரடி தகவால் பீதி!

12 December 2020 அரசியல்
bipinrawat.jpg

இந்தியப் பெருங்கடலில் 120க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாக, இந்தியத் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், காணொலி காட்சி மூலமாக பிபின் ராவத் பேசினார். அவர் பேசுகையில், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 120க்கும் அதிகமானப் போர்கப்பல்கள் நின்று கொண்டு இருக்கின்றன. தங்களுடைய இராணுவப் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும், பல்வேறுக் காரணங்களுக்காகவும் இந்த போர்கப்பல்கள் நிற்கின்றன.

இந்தியாவின் அமைதி மற்றும் வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டே, பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவுப் போர்கப்பல்கள் இருக்கின்ற போதிலும், இந்தியப் பெருங்கடல் பகுதியானது மிகவும் அமைதியாகவே உள்ளது என்றுக் கூறியுள்ளார். சீனாவிற்கு அச்சுறுத்துல் விடுக்கும் விதமாக, ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் மிகப் பெரியப் போர்கப்பல்கள் அனைத்தும் இந்தியப் பெருங்கடலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS