பீகார் இடி மின்னலுக்கு 10 பேர் மீண்டும் பலி! தொடரும் அவலம்!

20 July 2020 அரசியல்
lightninglatest.jpg

பீகாரில் நேற்று ஒரே நாளில் இடி மற்றும் மின்னலுக்கு, 10 பேர் பலியாகி உள்ளனர். அம்மாநிலத்தில், தொடர்ந்து இடி மின்னலுக்கு 100க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

பீகாரில் தற்பொழுது தென் மேற்குப் பருவ மழையானது, பெய்து வருகின்றது. இதனால், சாலைகளில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கடந்த மூன்று வாரங்களாக, கடுமையான இடி, மின்னல் ஏற்பட்டு வருகின்றன. இதனால், 100க்கும் அதிகமானவர்கள் வெறும் இடி மின்னலாலேயே மரணித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், நேற்றும் இந்த கொடூரமான இடி மற்றும் மின்னலுக்கு 10 பேர் பலியாகி உள்ளனர்.

சாம்பரான், பூர்ணியா, பெகுசராய் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட மின்னலுக்கு 10 பேர் பலியாகி இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மொத்தமாக கடந்த 20 நாட்களுக்குள் 160 பேர் பலியாகி உள்ளனர். இடி மற்றும் மின்னலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா நான்கு லட்ச ரூபாயானது நஷ்ட ஈடாக வழங்கப்படும் என, மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

HOT NEWS