விளையாட இடமே இல்லையா? கரண்ட் கம்பியைப் பிடித்தவர் மீட்கப்பட்டார்!

13 November 2019 அரசியல்
railboy.jpg

நம் நாட்டில் தான் இப்படி வித விதமாக ஆட்கள் இருக்கின்றார்கள். செல்போன் டவர் மீது ஏறுதல், மலையின் உச்சியில் நின்று கொண்டு செல்பி எடுத்தல், கரண்ட் கம்பியில் நடத்தல் என எல்லா சேட்டைகளும் இங்கு தான் நடக்கின்றன.

அந்த வரிசையில், தற்பொழுது ஒரு சேட்டை நடைபெற்று வருகின்றது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் மாவட்டத்தின் தப்ரா ரயில் நிலையத்தில் தான், அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொதுவாக மின்சார ரயில்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வழித்தடத்தில், அதிக உயரழுத்த மின்சாரம் பாயும். அப்படி பாயும் கம்பியினை ஒருவர் பிடிக்க முயற்சித்துள்ளார். இதனைப் பார்த்த, ரயில்வே ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தினைத் துண்டித்துள்ளனர். மேலும், தனி என்ஜின் மூலம் அவரை மீட்டுள்ளனர். இது குறித்து, வழக்குப் பதிவு செய்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இத்தகைய விபரீத செயலினை செய்தவர், மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது தற்கொலை செய்து கொள்வதற்காக அப்படிச் செய்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HOT NEWS