ஜியோமி எம்ஐ மிக்ஸ் ஆல்ஃபா அறிமுகமானது! 108எம்பி கேமிராவுடன் அசத்தல் டிஸ்ப்ளே!

24 September 2019 தொழில்நுட்பம்
mixalpha.jpg

ஆப்பிள், சாம்சங் ஸ்மார்போன் நிறுவனங்களைத் தொடர்ந்து, தற்பொழுது ஜியோமி நிறுவனமும், தன்னுடையப் புதிய ஸ்மார்ட் போன் மாடலை வெளியிட்டுள்ளது. பொதுவாக தற்பொழுது வெளியாகி உள்ள அனைத்து நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களும், கேமிராவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஆப்பிள் நிறுவனம் கூட நான்கு பின்பக்க கேமிராவினைக் கொண்ட, ஐபோன் 11 மாடலை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், ஜியோமி மட்டுமே டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தில், அதிக முக்கியத்துவம் செலுத்தி வருகின்றது.

அந்த வரிசையில், தன்னுடையப் புதிய ஸ்மார்ட் போனினை அறிமுகப்படுத்தி உள்ளது ஜியோமி நிறுவனம். ஆல்பா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் இருபுறமும், டிஸ்ப்ளே உள்ளது. சுமார் 6 இன்ச் அளவுள்ள இந்த ஸ்மார்ட் போன், கண்ணைக் கவரும் வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மிக அதிக தெளிவுடன் கூடிய டிஸ்ப்ளே இந்த போனில் உள்ளது. இவ்வளவு தெளிவான டிஸ்ப்ளேயைப் பயன்படுத்துவது, இதுவே போன்கள் வரலாற்றில் முதன்முறையாகும். 180.6% ஸ்கீரீன்-டூ-பாடி விகிதத்தில் இதன் டிஸ்ப்ளே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 4கே தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளது. இதனால், திரையறங்கில் பார்க்கும் அமைப்பினை, இந்த போன் வழங்கும். ஆன்ட்ராய்டு 10 இயங்கு தளத்துடன் உருவாகி உள்ள இந்த போன், ஆக்டா கோர் பிராஸசரை கொண்டுள்ளது. மேலும், ஆட்ரினோ கிராபிக்ஸ் கார்ட் வசதியையும் கொண்டுள்ளது.

இதில், மெமரி கார்டு மாட்ட முடியாது. மாறாக 12 ஜிபி ராமுடன், 512 ஜிபி உள்ளடக்க மெமரியுடன் உள்ளதால், ஸ்டோரேஜ் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பே இல்லை.

இதில் ப்ரைமரி கேமிராவாக மூன்று கேமிராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. 108எம்பி கேமிரா, 12எம்பி கேமிரா மற்றும் 20எம்பி கேமிரா ஆகியவை, இந்த ஸ்மார்ட்போனின் பின் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இதுவரை வெளியாகி உள்ள போன்கள் எதிலும், 108 எம்பி கேமிராப் பயன்படுத்தப்படவில்லை. இதுவே முதல்முறை. அதே சமயம், இதில் செல்ஃபி கேமிரா கிடையாது. பிங்கர் பிரிண்ட் உட்பட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, இந்த ஸ்மார்ட் போன் 4050எம்ஏஹெச் பேட்டரியையும், 40வாட்ஸ் அதிவிரைவு சார்ஜ்சரையும் கொண்டுள்ளது.

இவ்வளவு வசதிகளைக் கொண்டுள்ள, இந்த ஸ்மார்ட்போனின் விலையும் இதன் வசதிகளைப் போல மிக அதிகமாகவே உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 1,99,999 ரூபாய் மட்டுமே!

HOT NEWS