பிக்பாஸ் போட்டியாளருக்கு ஆதரவளித்துள்ள டபிள்யூடபிள்யூஈ புகழ் ஜான் சீனா!

06 February 2020 சினிமா
johncenaasimriaz.jpg

பாலிவுட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 13வது சீசனை எட்டியுள்ளது. இதனை, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இந்த நிகழ்ச்சியானது, பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களுள் ஒருவரான அசீம் ரியாசிற்கு, பிரபல மல்யுத்த வீரர் ஜான்சீனா ஆதரவு அளித்துள்ளார். அவரே வெற்றியாளர் எனவும் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தினைச் சேர்ந்த அசீம் ரியாஷ், பிக்பாஸ் 13வது நிகழ்ச்சியில், வட மாநில மக்களை கட்டிப் போட்டுள்ளார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு, அவருடையப் புகழ் வளர்ந்துள்ளது. இவருடையப் புகைப்படத்தினை, தன்னுடைய இன்ஸடாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜான்சீனா அசீம் ரியாஷ் தான் உண்மையான வின்னர் எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதற்கு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் நன்றிகளைத் தெரவித்துள்ளார். அசீம் ரியாஷ். இவருடையப் புகழைப் பார்த்த மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள், புகைச்சலுடன் உலா வருகின்றனர்.

HOT NEWS